
லத்தேரியை, அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர், இவருக்கு வயது 30 கட்டிட தொழில் செய்து வருகிறார். ஏற்கனவே இவருக்கு லிஜிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருது வேறுபாட்டின், காரணமாக லிஜிதா ஆண் குழந்தையை சேகரிடம் விட்டுவிட்டு பெண் குழந்தையுடன் பிரிந்து, தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இந்தசமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேகருக்கு, கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காரமடைகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோகிலாவுக்கும் இன்ஸ்டாவில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களிலே அது காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளனர், இவர்கள் திருமண செய்ய முடிவெடுத்த நிலையில் கோகிலா வீட்டில் யாரிடமும் சொல்லாமல், சேகருடன் கிளம்பி வந்திருக்கிறார், கோகிலாவை தேடிய பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளனர்.
கடந்த (ஜனவரி 30) ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் சேகரின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். கோகிலாவை பற்றி அறிந்த போலீசார் கால் செய்து கடலூருக்கு, விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.இதனால் பதற்றம் அடைந்த இருவரும், எங்கு தங்களை பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில், லத்தேரி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்