மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப பயணிகள் காத்திருந்த நிலையில், ஆரப்பாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பேருந்தின் ஓட்டுநரான கணேசன் பேருந்தை ரவுண்டானா அருகே நிற்கவைத்து பயணிகளை ஏற்றியுள்ளார்.
இதை அறிந்த உதவி மேலாளர் இதுகுறித்து கணேசனிடம் விசாரணை மேற்கொண்டு மெமோ கொடுக்க அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை இயக்காமல் இருந்ததால் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த ஓட்டுநர் மேலாளர் சொன்னால்தான் பேருந்து இயக்க முடியும் என கூறியுள்ளார்.
இதனால் உதவி மேலாளரிடம் சென்ற பேருந்தை இயக்குவது குறித்து மேலாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு மேலாளர் அடுத்த பேருந்து வரும் ஏறிச் செல்லுங்கள் என அலட்சியப்படுத்தும் விதமாக பதிலளித்துள்ளார் மேலும் அவருடன் இருந்த அதிகாரிகளும் மேலாளருக்கு துணையாக பேசியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை மேலாளர் “உள்ளே வா என அலுவலகத்தினுள் அழைத்து சென்று என்ன எல்லாரையும் தூண்டி விடுறியா? டேய் நாயே என்னடா செய்வ” என கேட்டு செருப்பால் அடித்துள்ளார். இதனை பயணிகள் வீடியோ எடுத்த நிலையில் உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடம் நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது புகார் அளிக்கப்படும் போது அதை கண்ணியமாக மேலதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றும். பயணிகளை பேருந்தில் ஏற்றிவிட்டு காத்திருக்க வைக்கக்கூடாது எனவும் இயக்குனர் இளங்கோவன் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.