கிரிப்டோ கரன்சி வைத்து ஏமாற்றியவரை கடத்திய நபரால் பரபரப்பு...

மதுரவாயலில், கிரிப்டோ கரன்சி வைத்து தொழில் செய்தவர் ஏமாற்றியதால், அவரைக் கடத்தி ஒருவர் தாக்கியுள்ளார்.
கிரிப்டோ கரன்சி வைத்து ஏமாற்றியவரை கடத்திய நபரால் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான சந்திரசேகர். இவர் கிரிப்டோ கரன்சி தொழில் செய்து வந்த நிலையில் சைதாப்பேட்டையை சேர்ந்த தினேஷ்(37), ராஜ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சந்திரசேகரிடம் கிரிப்டோ கரன்சி தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சந்திரசேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த நிலையில் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சந்திரசேகர் வீட்டில் இருந்தபோது பணம் கொடுத்து ஏமாந்து போன தினேஷ், ராஜ்குமார் இருவரும் சேர்ந்து சந்திரசேகரை அழைத்து போரூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து சரமாரியாக தாக்கி திருவொற்றியூர் அழைத்து சென்று அவரிடம் பணிபுரிந்த பெண்ணிடம் இருந்து சொகுசு காரை பறிமுதல் செய்து கொண்டு பின்னர் மாதவரத்தில் இறக்கிவிட்டு சென்றதாக புகார் அளித்தார்.

காயமடைந்த சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை தாக்கிய தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமை தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com