“அந்த நதியே வற்றிப் போயிட்டா?”... மது போதையில் காவலர் செய்த விபரீத செயல்...

சமயபுரம், சிறுகனூர் பகுதிகளில் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கிடைப்பதால் காவலரே மது போதையில் இருந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
“அந்த நதியே வற்றிப் போயிட்டா?”... மது போதையில் காவலர் செய்த விபரீத செயல்...
Published on
Updated on
1 min read

திருச்சி | சிறுகனூர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் தலைமை காவலர் குணசேகரன் இவர் பணியில் ஈடுபட்ட சிறுகனூர் காவல் நிலையத்திற்கு காவல் சீருடைகள் இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சமயபுரத்திலிருந்து சிறுகனூருக்கு காவல் சீருடையில் குணசேகரன் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்வதற்காக நோக்கி கொண்டிருந்தபோது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கல்பாளையம் அருகே மதுபோதையில் சாலையில் பக்கவாட்டு ஓரத்தில் சரிந்து விழுந்தார். 

இதில் குணசேகரனுக்கு கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் வீடியோ எடுத்த போது தகாத வார்த்தையில் திட்டியும், மிரட்டினார். 

பட்டப் பகலிலேயே மதுபான கடை இல்லாத நேரத்தில் 11 மணிக்கு மது போதையில் இருந்த சம்பவம் சமயபுரம், சிறுகனூர் பகுதியில் 12 மணிக்கு மதுக்கடையில் திறந்தாலும் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கிடைக்கும் என்பதால் காவலரே குடித்துவிட்டு போதையில் சாலையில் விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com