
விழுப்புரம் | வரும் தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது விழா முன்னதாக பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பெண்கள் மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டனர்.
மேலும் விழாவில் மையிலாட்டம் தாறை தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.