பசு மாடுகளைத் திருடி, காவலர் மீது வண்டி ஏற்றி சென்ற மர்ம கும்பல்...

இரவு நேரங்களில் மினி வேனில் பசுமாடுகளை திருடி சென்ற மர்மகும்பல், சார்பு ஆய்வாளரை மோதி தப்பி ஓட்டம்பிடித்த சிசிடிவி வீடியோ படு வைரலாகி வருகிறது.
பசு மாடுகளைத் திருடி, காவலர் மீது வண்டி ஏற்றி சென்ற மர்ம கும்பல்...
Published on
Updated on
1 min read

மதுரையில் சமீப காலமாக இரவு நேரங்களில் நகரிலும், புறநகர் பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தொடர் திருட்டை தடுக்க நகரின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும்போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாநகர் பகுதிகளில்
பகுதியில் தெருவில் நின்ற பசு மாட்டை மர்ம கும்பல் பிடித்து இழுத்து மினி வேனில் திருடி செல்லும் காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

குறிப்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கூடல்நகர் காவல் சார்பு ஆய்வாளர்  தவமணி மீது சோதனை சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகன மோதி சென்றதால் சார்பாக காலில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து இந்த திருட்டு கும்பல் இங்க சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மாநகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com