
கடலூர் | முதுநகர் அருகே அக்கரை கோரி என்ற மீனவ கிராமம் உள்ளது. மீன்பிடித்து விட்டு தங்கள் படகுகளை இங்கு உள்ள உப்பனாற்று கரையோரம் நிறுத்திவைப்பது வழக்கம். இந்நிலையில் உப்பனாற்று கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு நள்ளிரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதில் எட்டு படகுகள் இரண்டு வலைகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு 15 லட்சம் என கூறப்படுகிறது, தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தும், ஏதேனும் முன்பகை காரணமா? என்ற கோணத்திலும் கடலூர் துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் ஏரிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.