பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்...

தமிழர் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் நாகை மாவட்ட கல்லூரி மாணவர்கள்
பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்...
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினம் | தமிழர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்டமான பொங்கல் திருவிழாவிற்காக ஆண்டு முழுவதும் மிக அதிகமாக தமிழ் மக்கள் காத்து வருவர். அதிலும், ஆங்கில புத்தாண்டு முடிந்து வரும் முதல் தமிழர் திருநாள் தான் பொங்கல் திருவிழா. இதனைக் கொண்டாட மானவர்களும் கூட ஆர்வமாக காத்து வருகின்றனர்.

அந்த வகையில், நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னதாக சூரியபகவானுக்கு படையலிட்டு பூஜைசெய்த கல்லூரி மாணவ, மாணவிகள் பின்னர் புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.

அதனை தொடர்ந்து புதுப்பானையில் வைக்கப்பட்ட பொங்கல் பொங்கிவர அனைவரும் பொங்கலோ பொங்கல்! என்று உற்சாகத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு கட்டக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது  கல்லூரி மாணவிகள் ஆட்டம் பாரம்பரிய முறைப்படி உற்சாகத்துடன் மாட்டு வண்டிகளில் வலம்வந்து குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி பொங்க பொங்கலை கொண்டாடினர்.

சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரியில் படிக்கும் அனைத்து மதத்தினரும் இதில் கலந்துகொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாகவும், மேலும் தமிழின கலாசாரப்படி பெண்கள் புடவையிலும், ஆண்கள் வேஷ்டியிலும் உடையணிந்து இவ்விழாவில் கலந்துகொண்டது பெருமையாகவும் மகிழ்சியாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com