“கிட்னியை வித்தாவது காசு குடு” - தற்கொலையில் வெளிவந்த மோசடிகள்… வீடியோ பதிவிட்டு உயிரைவிட்ட போட்டோ எடிட்டர்!

தனிப்பட்ட நபர்களிடமும் கடன் தொகையை நந்த கோபாலுக்கு பெற்றுத் தந்தாக சொல்லப்படுகிறது...
“கிட்னியை வித்தாவது காசு குடு” - தற்கொலையில் வெளிவந்த மோசடிகள்… வீடியோ பதிவிட்டு உயிரைவிட்ட போட்டோ எடிட்டர்!
Published on
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்து பனை பகுதியை சேர்ந்தவர் 42 வயதுடைய நந்தகோபால். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடிட் செய்யும் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த தினேஷ், ஹரி என்ற இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மூவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நந்தகோபால் ஹரி என்பவருடைய ஸ்டுடியோவில் போட்டோ எடிட்டிங் செய்து வந்தார்.

இந்நிலையில் நந்த கோபாலுக்கு குடும்ப செலவுகளுக்காக பணத்தேவை ஏற்படவே தினேஷிடம் கடன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். எனவே அவர் சில இடங்களில் லோன் மூலமாகவும் தனிப்பட்ட நபர்களிடமும் கடன் தொகையை நந்த கோபாலுக்கு பெற்றுத் தந்தாக சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை நந்தகோபால் வெளியிடங்களில் கடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த கடனுக்கு வட்டி மற்றும் அசல் தொகை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் நந்தகோபாலை பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். மேலும் பணம் கொடுத்த ஸ்டுடியோ நடத்தும் தினேஷ் ஹரி ஆகியோரும் நந்தகோபாலை “ நீ உடனடியாக பணத்தை தர வேண்டும்” என தொடர்ந்து அவரை வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்தகோபால் வீடியோ வாக்குமூலம் ஒன்றை தன்னுடைய செல்போனில் வெளியிட்டுள்ளார்.

Admin

அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர் ஹரி என ,குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துவிட்டு நேற்று இரவு சாணி பவுடர் குடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் தினேஷும் இறந்து போன நந்தகோபாலும் பேசும் ஆடியோவில் நந்தகோபாலிடம் தினேஷ் “நீ உடனடியாக 2 லட்சம் ரூபாய் ஆவது பணத்தை தயார் செய்து தர வேண்டும் பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. எனவே உனது கிட்னியை விற்றாவது நீ எங்களுக்கு பணம் தர வேண்டும்” என வலியுறுத்தி பேசும் ஆடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com