தேசிய முந்திரி தின விழா...! அரசுக்கு கோரிக்கை வைத்த முந்திரி விவசாயிகள்..!

தேசிய முந்திரி தின விழா...! அரசுக்கு கோரிக்கை வைத்த முந்திரி விவசாயிகள்..!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் சார்பில் முந்திரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தேசிய முந்திரி தின விழா கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கலந்துகொண்டு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். 

அப்போது முந்திரி ஏற்றுமதியாளர் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் முந்திரி கன்றுகளை பயிரிட அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொள்வதாகவும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அதிகரித்துள்ளதால் முந்திரி தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் எனவே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் பொருளாளர் செல்வமணி உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் முந்திரி விவசாயிகள் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com