புதிய கார் நிறுத்தத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்...

டோக்கன் பெற நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் கவர்னர் தமிழிசை பாதிப்படைந்துள்ளது. இதனால், 300 மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய கார் நிறுத்தத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்...
Published on
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட்ட 6 அடுக்கு மல்டிலெவல் கார் பார்கிங் அதிகாலை முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த கார் பார்கிங் செயல்படுத்தும் முறையை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதனால் வாகன நிறுத்த ரூ.20ல் இருந்து ரூ.300 வரை இருந்த கட்டணங்ள் ரூ.30ல் இருந்து ரூ.600 வரை பல மடங்கு உயர்த்தப்பட்டன.  

சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி 304 கார்கள் உள்ளது. அந்தப் பிரீப்பேய்ட் டாக்ஸி ஒவ்வொன்றும் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு மாதம் ரூ.2,500 பார்க்கிங் கட்டணமாக வசூலித்தது.

ஆனால் இனிமேல் தனியார் ஒப்பந்ததாரர் ஒவ்வொரு டாக்ஸிக்கும்  ரூ. 6,500 மாதம் கட்ட வேண்டும். அதோடு 104 டாக்சிகளுக்கு மட்டுமே இந்த கட்டணத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மீதிமுள்ள 200 கார்களுக்கு 30 நிமிடங்களுக்கு ரூ. 75 வீதம் கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் டாக்ஸி சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

அதிகாலை முதல் புதிய கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வந்தது. விமான நிலையத்திற்குள் வாகனங்கள் நுழைவு வாயில் அருகே கட்டண சாவடிகள் அமைத்து வாகனங்கள் நுழையும் நேரத்தை கணக்கீட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் அதிக விமான சேவைகள் இருக்கும்.

இதனால் வாகனங்கள் அதிகமாக வரும். இந்த நிலையில் புதிய டோக்கன் முறையால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. மேலும் டோக்கன் பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன  இதனால் கட்டண சாவடிகளில் விமான நிலையத்திற்கு வந்தவர்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர். 

விமானிகள், பயணிகள் ஆகியோர் வாகனங்கள் நீண்ட வரிசையில்  இருந்ததால் விமானத்திற்கு செல்ல தாமதம் ஏற்படும் நிலை உருவாகும். இதனால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com