10 ஆண்டுகள் காதலித்து கரம்பிடித்த புதுமண தம்பதிகள்...! சாலை விபத்தில் பலியான சோகம்...!

10 ஆண்டுகள் காதலித்து கரம்பிடித்த புதுமண தம்பதிகள்...! சாலை விபத்தில் பலியான சோகம்...!
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி அருகே நெற்புகபட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (34). இவர் கனடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் போது காரைக்குடியை சேர்ந்த  நதியா (34) என்பவரை காதலித்தார். இருவரும்  10 ஆண்டுகளாக காதலித்து வந்த  நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று முன்தினம் வியாழன் அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இன்று காரைக்குடியில் உள்ள மனைவி வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு நெற்புகபட்டிக்கு திரும்பும் போது, 
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆவிடபொய்கை அருகே புதுக்கோட்டையில் இருந்து வந்த சொகுசு கார், எதிரே வந்த புதுமணத் தம்பதியினரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து ஏற்பட்டது.

இதில் புதுமண தம்பதிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். காரைக்குடி அரசு மாவட்ட தலைமை  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மதன்குமார் உயிரிழந்தார். அவரது  மனைவி நதியா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சாலை விபத்தில் கார் கவிழ்ந்ததில்  அதில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் விசாரனை செய்தார். மேலும் சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com