கரூர் | கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணி இனிமேல் நீட்டிக்கப்படாது என்று கடந்த 31ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் இந்த அரசாணையை கண்டித்து தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று திரண்ட செவிலியர்கள் தங்களது கை குழந்தைகளுடன், கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் 36 பேர் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்டு கைக்குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு உயிரை பணயம் வைத்து பணி செய்து வந்த எங்களை திடீரென்று பணியிலிருந்து விடுவித்ததால் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணி பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த ஊழியராக தங்களால் தொடர முடியாது எனவும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.