
தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுராந்தகம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட சுமார் 29 மூட்டைகள் இருந்துள்ளன அவற்றை பிரித்து சோதித்த போது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசியை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த செங்கல்பட்டை சேர்ந்த கெஜராஜ் மற்றும் ராஜேஷ் என்ற இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரேஷன் அரிசிகளை கடத்தி வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது இதனை தொடர்ந்து சுமார் 1450 கிலோ அரிசியை பறிமுதல் செய்து, ராஜேஷ் மற்றும் கஜராஜை கைது செய்தனர்.
மேலும் படிக்க | புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணி உறுப்பினர் கைது...