
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, நூகு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படடுள்ளது. இதனால், பிலிகுண்டுவிற்க்கு 1 லட்சத்தி 45ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் தடையானது 18வது நாட்களாக நீடித்து வருகிறது.