நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வேன் திருட்டு...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ டிராவலர் வேன் திருடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வேன் திருட்டு...
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு | சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சேர்ந்த ரத்தீஷ், கே ஆர் சி என்னும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான டெம்போ ட்ராவல்லர் வேன் ஒன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகி, வாகந்த்தின் முன்பக்கம் சேதமடைந்தது.

இந்நிலையில், காகாப்பீட்டு நிறுவனம் மூலம் இழபீடு தொட்கை பெறுவதற்காக வாகந்த்தை கீழக்கரணை அருகே நிறுத்தி வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, வாகந்த்தை சரி செய்வதற்காக உரிமையாளர் ரத்தீஷ் சர்வீஸ் செண்டரில் இருந்து ஆட்களை வரவழைத்து வாகனத்தை எடுத்து செல்ல கூறியுயுள்ளார்.

ஆனால், அங்கு வந்து பார்த்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரத்தீஷின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ வாகனம் அங்கு இல்லை. இதனால் பயந்து போன ரத்தீஷ், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங், ரத்தீஷின் வாகனத்தை எடுத்துச் செல்ல JUSTDIAL என்ற செயலியைத் தொடர்பு கொண்டது தெரியவந்தது.

மேலும், வாகனம் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அந்த் அவாகனத்தை விழுப்புரம் வரை அழைத்து செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன்படி வாகனத்தை எடுத்துச் சென்று விழுப்புரம் அருகே விட்டு வந்ததாகவும் ஜெய்சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, விழுப்புரம் சென்ற போலீசார் பழைய இரும்பு கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வேனை மீட்டு திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த விஜி (30), கமல் (26), சுரேஷ் (31) மற்றும் ராமகிருஷ்ணன் (34) உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com