பெட்ரோல் குண்டு வீச்சு... 5 பேர் கைது...

நாகை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு... 5 பேர் கைது...
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம் | கீழ்வேளூர் அடுத்த தேவூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி  தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் எரும்புக்கண்ணியைச்சேர்ந்த புகழேந்திரன், பட்டமங்கலத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் ஓசியில் சரக்கு கேட்டு தகாரறில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த தகாரறில் பாரில் இருந்த அரசு பேருந்து ஓட்டுனர்பாஸ்கரின் வேன் டிரைவர் பிரவீன்குமாரை புகழேந்திரன், அஜித் இருவரும்  அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாஸ்கர் இருவரையும் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இரவில் அரசுப் பேருந்து ஓட்டுனர் பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலச்சுந்தரம் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.

இதுக் குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இரவில் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கீழ்வேளூர் போலீசார் பெட்ரோல் குண்டு வீசியவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் எரும்புக்கண்ணியைச் சேர்ந்த புகழேந்திரன், பட்டமங்கலத்தைச் சேர்ந்த அஜித் உள்பட நான்கு பேரை கைது செய்து செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com