"மூன்று ஆண்டுகளுக்கு பின் விசாரணைக்கு வந்த வழக்கு" - படுக்கை வசதியுடன் அழைத்து செல்லப்பட்ட ஆயுள் தண்டனை கைதி.. தப்பி ஓட்டம்!

விசாரணைக்காக பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஹமீதை புழல் சிறையில் இருந்து பேருந்து
"மூன்று ஆண்டுகளுக்கு பின் விசாரணைக்கு வந்த வழக்கு" - படுக்கை வசதியுடன் அழைத்து செல்லப்பட்ட ஆயுள் தண்டனை கைதி.. தப்பி ஓட்டம்!
Published on
Updated on
1 min read

பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது அப்துல் காதர். இவர் செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்தால் போக்சோ வழக்கில் கைது செய்ப்பட்டார். மேலும் இந்த வழக்கு செங்கல்பட்டு அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு  ஹமீதுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இதனால் புழல் சிறையில் ஹமீது அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஹமீது செய்த குற்றத்திற்காக அவர் மீது பாண்டிச்சேரியில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த போக்சோ வழக்கு விசாரணைக்காக பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஹமீதை புழல் சிறையில் இருந்து பேருந்து மூலமாக போலீசார் அழைத்து சென்று நேற்று மதியம் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

ஆஜர் படுத்திய பின்னர் குற்றவாளி ஹமிதை புழல் சிறையில் அடைப்பதற்காக மீண்டும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் அவரை போலீசார் அழைத்து வந்த நிலையில், நீலாங்கரை அருகே வரும்போது அவரை போலீசார் பார்த்தபோது ஹமீது வாகனத்தில் இல்லாததை கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்த ஆயுதப்படை போலீசார் அங்குள்ள பகுதிகளில் தேடிய போதும் அமித் காணாததால் இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் போலீசார் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு  செய்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com