
புதுக்கோட்டை | இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதன் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை அரவம்பட்டி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டிருந்த 50 அடி உயர கொடி கம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி தொண்டரின் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது மணமக்கள் தங்களது தாயையும் தந்தையும் பின்பற்றி வாழ வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டம் கேப்டனின் நெஞ்சில் இருந்து நீங்காத இடம் பெற்ற மாவட்டமாகும் ஏனெனில் இங்கு நடைபெற்ற மாநில மாநாட்டையும் அதன் பிறகு நானும் கேப்டனும் கலந்து கொண்ட இப்தார் நோன்பு நிகழ்வையும் என்றுமே மறக்க முடியாது” என்று நினைவு கூர்ந்தார்.
மேலும் பேசிய அவர், கேப்டன் உடல் நலத்தோடு நன்றாக உள்ளதாகவும் விரைவில் அவர் உங்கள் முன் தோன்றுவார் என்றும் கூறினார். இதனத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
மேலும் படிக்க | ‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...