பாலியல் பலாத்காரம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டம்...

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்று கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டம்...
Published on
Updated on
2 min read

ராமநாதபுரம் | பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்று கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர் அவை தலைவரும், (தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) நகர் மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளவர் 43 வயதான சிகாமணி.

மறத்தமிழர் சேனைக்கட்சியின் தலைவர் புதுமலர் பிரபாகரன் என்ற பிரபாகரன், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் இருந்துள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, இதற்கு உடந்தையாக இருந்ததாக கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய ஐந்து பேரை மார்ச் 3 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி அனைத்து மக்களும் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை கடை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com