சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

பொன்னமராவதி அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை | பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் இருந்து பண்ணைக்களத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையானது ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இருச்சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுவதாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப்பகுதியில் விளையும் காய்கறிகளை பொன்னமராவதி சந்தைக்கு கொண்டு செல்வதற்கு சிரமப்படுவதால் இச்சாலையை உடனடியாக சரிசெய்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com