கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்த லாரி... அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமில்லை...

கட்டுப்பாட்டை இழந்த கனரக லோடு லாரி விழுந்ததால், மின் கம்பம் பாதிப்படைந்தது.
கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்த லாரி... அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமில்லை...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை | கந்தர்வக்கோட்டை அருகே உள்ள காடவராயன்பட்டியில் அரியலூரிலிருந்து பொன்னமராவதிக்கு சிமெண்ட் மூட்டுகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி கவிழ்ந்ததால் லாரியில் உள்ள சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் அருகே இருந்த மின்கம்பத்தில் சாய்ந்ததால் அந்த மின்கம்பம் சாய்ந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் சாலையில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் மாற்று லாரிக்கு ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com