புதுக்கோட்டை : காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்...பேச்சுவார்த்தைக்கு வராத அரசு அதிகாரிகள்...

புதுக்கோட்டை : காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்...பேச்சுவார்த்தைக்கு வராத அரசு அதிகாரிகள்...
Published on
Updated on
2 min read

குடிநீர் வராததை கண்டித்து 300க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

காலி குடங்களுடன் சாலை மறியல் :

புதுக்கோட்டை மாவட்டம் : விராலிமலை அருகேயுள்ள விராலூர் ஊராட்சி கொடிக்கால்பட்டியில் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக  குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விராலூர் ஊராட்சியில் சுமார் 1500 குடும்பங்களும், 6000 க்கு மேற்பட்டோரும் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் விடியா அரசு பொறுப்பேற்றதில் இருந்தே இரண்டு ஆண்டுகளாக முறையாக குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது.

மேலும்  ஊராட்சி மன்ற தலைவரிடம்  பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாகவும் வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் தினந்தோறும் வந்து கொண்டிருந்த காவேரி ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரும் சரிவர கிடைப்பதில்லை.

ஊராட்சி மூலம் மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேமித்து வழங்கப்படும் பஞ்சாயத்து குடிநீர் கூட முறையாக வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300 க்கும்  மேற்பட்டோர் காலி குடங்களுடன் புதுக்கோட்டை மணப்பாறை நெடுஞ்சாலையிலே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மணப்பாறை புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால் இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை, போராட்டமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com