புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை - திமுக , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை - திமுக , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலக்கழிவு கலந்த விஷமிகளை கைது செய்யக்கோரி கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு கலந்த விஷமிகளை கைது செய்யக்கோரி கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்காத திமுக அரசை கண்டித்தும் இந்த பிரச்சனையில் பாராமுகம் காட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


மனித இனமே கண்டிராத அருவருக்கத்தக்க இச்செயலை செய்த  கொடியவர்கள் மீது காவல்துறையை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட மேலிட பொறுப்பாளர் தங்கதுரை கண்டன உரையாற்றி பேசினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அகர முத்து, அரவக்குறிச்சி ரிபைதின், கட்சி நிர்வாகிகள் நிலவன் ராஜா, செந்தில் குமார், சுரேந்தர், சுடர் வளவன், உள்ளிட்ட பலர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com