ஆதிதிராவிடர் பகுதியில் ரேசன் கடை - சமையல் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஊ செல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வாழும் பகுதியில் நியாய விலை கடை இல்லாததால் மாற்று சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் நியாய விலை கடை இருக்கிறது.
அங்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் தலித் மக்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் நியாய விலை கடை வினியோஸ்கர் ஆதிதிராவிடர் வரும்பொழுது எல்லாம் ரேஷன் பொருள் காலியாகிவிட்டது என்றும் இன்று போய் நாளை வா இன்று போய் நாளை வா என்று காலம் கடத்தி பொருட்களை தராமல் ஏமாற்றி வருவதாகவும் இந்த இந்த சம்பவம் தொடர் பிரச்சினையாக உள்ளதால் தலித் மக்கள் நாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எங்களுக்கு தனியாக நியாய விலை கடை வேண்டும்.
என்றும் பலமுறை சட்டமன்ற உறுப்பினர் மனு கொடுத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் இன்று உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் அதுமட்டுமில்லாமல் அங்கேயே சமையல் செய்து சாப்பிட போவதாக கூறி பாத்திரம் வைத்து அடுப்பு வைத்து போராட்டம் செய்யும் இடத்திலேயே சமையல் செய்ததால் காவல்துறையினர் உடனடியாக வந்து போராட்டக்காரர்களிடம் இது மாதிரியான செயல்களை சாலையில் செய்யக்கூடாது என்றும் உடனடியாக நிறுத்த கோரி கேட்டுக் கொண்டார் காவல்துறை சொன்னதை கேட்காமல் மீண்டும் மீண்டும் தீயை மூட்டி சமையல் செய்ய ஆரம்பித்ததால் அதனை தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் படிக்க | கூலி தர தாமதமானதால், முதியவரை கொன்ற கொத்தனார்
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார் மற்றும் முக்கிய பொறுப்பாளர் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்