கணவரின் இறுதி சடங்கிற்கு சென்ற பெண்ணின் வீட்டில் நடந்த கொள்ளை...

கணவரின் இறுதி சடங்கிற்கு சென்ற பெண்ணின் வீட்டில் நடந்த கொள்ளை...
Published on
Updated on
1 min read

ராணிபேட்டை | வாலாஜாபேட்டை அடுத்த மாதவன் பாலா நகர் பகுதியில் சேர்ந்த பழனி, வள்ளுவம் பார்க்கம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மாலை உயிரிழந்த நிலையில் பழனி உடல் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த முத்தரசி குப்பம் பகுதிக்கு இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது.

பூட்டி வைத்திருந்த அவரது வீட்டின் முன்பக்கம் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வாலாஜாபேட்டை காவல்துறை மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையடிக்கப்பட்டுள்ள வீட்டில் சென்று பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

அப்பொழுது வீட்டினுள் பூஜை அறை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் 3.50 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் இதே போன்று பழனியின் பக்கத்து வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com