100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி... பதிலளிக்க உத்தரவு...

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி... பதிலளிக்க உத்தரவு...
Published on
Updated on
1 min read

தென்காசி | ஆலங்குளம் தாலுகா நல்லூர் ஊராட்சியில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் 100 நாள்  வேலையின் கீழ் பணிகள் நடைபெறுகிறது. நல்லூர்  ஊராட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக  ஊராட்சி  நிதியை செலவு செய்ததாக நல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர்ர் மற்றும்  அலுவலர்கள்  முறைகேடான கணக்கு காண்பித்திருக்கிறார்கள். 

ஆனால்  ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்தவித பணியும் நடைபெறவில்லை போலியான ரசீது மற்றும் புகைப்படங்களை தயாரித்து பதிவேற்றம் செய்து பஞ்சாயத்து நிதியை முறை கேடு செய்து உள்ளார்கள்.

முறைகேடில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற செயலாளர்  மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை எனவே ஊராட்சி மன்ற  செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.மனு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நல்லூர்  ஊராட்சி மன்ற செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com