போக்குவரத்து, கல்வி விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் ...

மேலூரில் மாணவர்கள் பங்கேற்ற, போக்குவரத்து மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
போக்குவரத்து, கல்வி விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் ...
Published on
Updated on
1 min read

மதுரை | மேலூரில் போக்குவரத்து காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து சாலை போக்குவரத்து மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். மேலூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

அழகர்கோவில் சாலை,பேங்க் ரோடு,என நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வந்த ஊர்வலத்தில் வழி நெடுக கற்ப்போம், கற்பிப்போம், எனது வீட்டில் எழுதப் படிக்க தெரியாதோர் யாரும் இல்லை என பெருமை கொள்கிறேன்.

கல்வியே செல்வம், கல்வியே அறிவு, கற்பதே பெருமை, என்ற விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும் சாலை விதிகளை மதிப்போம்! விபத் தினை தடுப்போம்! மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது! ஹெல்மெட் அணிந்தே இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும்! என்பன உள்ளிட்ட போக்குவரத்து குறித்தும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com