
மதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கத்தின் சே.குவாராவே என போஸ்டர் ஒட்டி வரவேற்கும் திமுகவினர்.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள கலைஞர் திடலில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை அடுத்து ஒருங்கிணைந்த திமுகவின் மூன்று மாவட்டங்கள் சார்பில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் மதுரை வர உள்ளார்.
இதனை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலினை சே.குவேரா போல சித்தரித்து "தூங்கா நகரம் வருகை தரும் சேப்பாக்கத்தின் சே.குவேராவே!" என திமுகவினர் ஒட்டி உள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.