ரூ. 32 கோடி செலவில் சென்னை மக்கள் தாகம் தீர்க்க புதிய நீர் தேக்கம்...

சென்னை மக்களின் நீர் தேவை தீர்க்க, 32 கோடி ரூபாய் செலவில், சிக்கராயபுரம் கல்குவாரி நீர் தேக்கமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ. 32 கோடி செலவில் சென்னை மக்கள் தாகம் தீர்க்க புதிய நீர் தேக்கம்...
Published on
Updated on
1 min read

தலைநகர் சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை அதிகரிப்பால் குடிநீர் தேவையும் உயர்ந்து கொண்டே வருகிறது சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் இருந்தாலும் சில ஆண்டுகளில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதுண்டு. 

 2017 மற்றும்  2019 ஆம் ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்ட போது  சென்னை மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்த  சிக்கராயபுரம் கல்குவாரி என்பதை யாரும் மறக்க முடியாது. இதனால் கல்குவாரியில் உள்ள 25 குட்டைகளையும் இணைத்து நீர்த்தேக்கமாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு குட்டையும் சுமார் 300 அடியில் இருந்து 400 அடி ஆழம் உள்ளதால் பக்கவாட்டில் மூன்றரை அடியில் தடுப்பணையுடன்  32 கோடி ரூபாயில் நீர் தேக்கம் அமைய உள்ளது.

குன்றத்துார் அருகே  செம்பரம்பாக்கம் உபரி நீர் கால்வாய் கடக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்டார சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு  கால்வாய் மூலம் குட்டைகள் இணைக்கப்படும்.

கால்வாயின் வழியாக 500 கன அடி நீர் சிக்கராயபுரம் கல்குவாரிகளுக்கு கொண்டுவரப்படும்.பத்து நாட்கள் உபரி நீர் கால்வாய்க்கு கொண்டு வரப்படும்போது கல்குவாரியில் உள்ள அனைத்து குட்டைகளும் நிரம்பிவிடும். இதன் மூலம் சுமார் 400 மில்லியன் கன அடி வரை நீரை சேமிக்க முடியும்.

இந்த நீர் தேக்கத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு பணிகளை முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சென்னையின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய பல ஆண்டுகளுக்கு பிறகு  நீர்த்தேக்கம் அமைய உள்ளதை எதிர்பார்த்து உள்ளனர் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com