திருநங்கைக்கு கோ-தானம் செய்த சமூக ஆர்வலர்... புதுவாழ்வில் நிம்மதியாக இருக்கும் திருநங்கை...

ஆதரவற்று வறுமையில் வாடிய திருநங்கையை தேர்ந்தெடுத்து அவருக்கு கோ-தானம் வழங்கி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிய தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருநங்கைக்கு கோ-தானம் செய்த சமூக ஆர்வலர்... புதுவாழ்வில் நிம்மதியாக இருக்கும் திருநங்கை...
Published on
Updated on
2 min read

விருதுநகர் | காரியாபட்டியில் பசித்தோருக்கு உணவளிக்கும் தனியார் (இன்பம்) பவுண்டேஷன் எனும் நிறுவனத்தை சமூக ஆர்வலர் விஜயகுமார் என்பவர் இதில் தினந்தோறும் ஏழை முதியோர்களுக்கும், நரிக்குறவ இன மக்களுக்கும் இவ்வமைப்பின் சார்பில் இலவசமாக உணவளித்து பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ-தானம் என்கிற பசு, கன்று தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. இப்பகுதி வானம் பார்த்த வரண்ட பூமியாகும், முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

ஏழை எளிய மக்கள் நிறைந்த இந்த பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கணவரை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமையில் வாடும் பெண்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதமும் ஒரு ஏழை குடும்பத்திற்கு பயன் பெறும் வகையில் சமூக ஆர்வலர் விஜயகுமார் பசு தானம் வழங்கி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இந்த மாதம் எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியாக வசித்து வரும் திருநங்கைகள் பிழைப்பதற்கு வழி இல்லாமல் டோல்கேட் மற்றும் கடை பகுதி, இரயில் நிலையம், ஆகிய பகுதிகளில் யாசகம் பெற்று வந்து அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர். அப்படி ஒருவர் தான் பழனியம்மாள் என்ற திருநங்கை.

அவரைத் தேர்வு செய்து அவருக்கு இன்பம் பவுண்டேஷன் சார்பில் கோ தானம் செய்ய முடிவெடுத்து, கன்றுடன் கூடிய காராம்பசு வாங்கி கொடுத்தார்.

அதனை, காரியாபட்டி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை செய்து முருகனுக்கு பசுமாட்டின் முதல் பாலில் அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.

பின்னர் தேர்வு செய்யப்பட்ட பழனியம்மாள் என்ற திருநங்கைக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு, கன்றுகுட்டியினை பசித்தோருக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர் விஜயகுமார், தமிழரசி போஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

சமூகத்தில் பின்தங்கி உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மாதந்தோறும் அம்மாவாசை தினத்தை முன்னிட்டு கோ-தானம் வழங்கி வரும் தன்னார்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com