இரவு 9 மணி வரை சிறப்பு வகுப்புகள்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

இரவு 9 மணி வரை சிறப்பு வகுப்புகள்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் பள்ளியில் மாணவா்களுக்கு இரவு வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செஞ்சியில் தனியாா் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு இரவு 9 மணி வரை ஆசிாியா்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தியதாக தொிகிறது.  இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இயங்கி வரும்  சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இரவு 9 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com