மாநில அளவிலான கால்பந்து போட்டி... 40 அணிகள் பங்கேற்பு...

கும்பகோணம் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான கால்பந்து போட்டி... 40 அணிகள் பங்கேற்பு...
Published on
Updated on
1 min read

தஞ்சை | கும்பகோணத்தில் நகர மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியை பழைய மாணவர் சங்க தலைவர் மூத்த வழக்கறிஞர் சக்கரபாணி செயலாளர் சிவகுமார் ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் செயற்குழு உறுப்பினர் சங்கர் ரவிச்சந்திரன் சீதாராமன் ராஜேந்திரன் ராதாகிருஷ்ணன் ராம்குமார் லியோன் மதிமுக இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி 12 வயது 4 அணியினரும் 14 வயது 14 அணியினரும் 17 வயது 22 அணியினரும் மொத்தம் 40 அணியினர் கலந்து கொள்கின்றனர். இந்த கால்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தஞ்சை திருவாரூர் நாகை திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டத்திலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளை வெற்றி பெற்று அணிநருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com