ஊதிய உயர்வு கோரி ஸ்விக்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு கோரி ஸ்விக்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
Published on
Updated on
1 min read

சென்னை | ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றி தர வேண்டும், ஆட்டோ காத்திருப்புகளுக்கு கட்டணம் வழங்க வேண்டும், கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஊழியர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com