
தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயா, இவருக்கு வயது 45.இவர் தி நகர் நானா தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வடிவேல், என்பவர் வீட்டில், வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் ( ஏப்ரல் 22) காலை வேலைக்கு செல்லும் போது, விஜயா அவரது மருமகளையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
சமையலுக்காக விஜயாவும் அவரது மருமகளும் காய்கறி நறுக்கி கொண்டிருந்த போது, விஜயா மருமகளிடம் பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு பாத்ரூமிற்கு சென்றுள்ளார்,வெகு நேரம் ஆகியும் விஜயா வரததால்,பாத்ரூமிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து விஜயாவின் மருமகள் அலறியதால் அக்கம் பக்கத்தினர் வந்து கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனை விஜயாவை கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் விஜயாவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை அடுத்து தகவலறிந்த போலீசார் விஜயாவின் மருமகளிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பாத்ரூமில் சென்று பார்க்கும் போது விஜயாவின் உடலில் மேலாடை இல்லாமல் சடலமாக கிடந்ததாகவும், நகக்கீறல்கள் உடலில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மாம்பலம் போலீசார் சந்தேகமரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலியல் பலாத்கார முயற்சித்த போது விஜயா உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்