மிருகங்களுக்காக போடப்பட்ட வேலியில் சிக்கி உயிரிழந்த வாலிபர்...

தேவாரத்தில் காட்டு யானை பன்றிகளிடம் இருந்து பயிரை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட மின்வெளியில் மின்சாரம் பாய்ந்து சூரிய பிரகாஷ் 30 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.
மிருகங்களுக்காக போடப்பட்ட வேலியில் சிக்கி உயிரிழந்த வாலிபர்...
Published on
Updated on
1 min read

தேனி | தேனி மாவட்டம் தேவாரம் அருகே பதினெட்டாம் கால்வாய் மேற்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கப்பக்கிழங்கு வேர்கடலை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த பயிர்களை காட்டு பன்றிகள் நாள்தோறும் அதிக அளவில் சேதப்படுத்தி வந்த நிலையில் அப்பகுதியில் 32 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கப்பைகிழங்கு பயிரை காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றிகளிடம்  இருந்து காப்பாற்ற விவசாயிகள் தாங்களாகவே மிண்வெளி அமைத்துள்ளனர்.

இந்த 32 ஏக்கரில் ஜிகே மணி என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் தோட்டத்தில் அவரது மகன் சூரிய பிரகாஷ் நேற்று மாலை 6 மணி அளவில்  தோட்டத்தில் உரம் கலக்கி பில்டரில் ஊற்றச் சென்றுள்ளார். தனது தோட்டத்தின் மின் இணைப்பை துடைத்துவிட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த சூரிய பிரகாஷ் மின் இணைப்பை துண்டித்ததாக நினைத்து அருகாமையில் வேலை பார்த்தது வந்துள்ளார்.

ஆனால் அருகாமையில் உள்ள பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து மின்வெளியில் மின்சாரம் சூரிய பிரகாஷ் தோட்டத்து மின்வெளியில் பாய்ந்து உள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சூரிய பிரகாஷ் மின்வெளியில் கால் வைத்த உடனே உயர் அழுத்த மின்சாரம் அவர் மீது பாய்ந்து மிண்வெளி  இடது காலில் சுற்றி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

அவருடன் இருந்த உறவினர் சரவணன் என்பவர் அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளித்து  மிண்வெளியில் மின்சாரம் பாய்ந்து சிக்கி இருந்த சூரிய பிரகாசை மீட்டு தேவாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்சூரிய பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்த நிலையில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காட்டு யானை பன்றிகளிடமிருந்து பயிரை காப்பாற்ற வைக்கப்பட்ட மிண்வெளி தற்போது சூரிய பிரகாசிற்கு எமனாக மாறியுள்ளதுஇந்த இளம் விவசாயின் உயிரிழப்பு தேவாரம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com