

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதியில் அரிகேரியை சேர்ந்த தமிழழகன் மற்றும் தினேஷ் ஆகிய இருவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர். பெண்ணாடம் பகுதியின் சுற்று வட்டார பகுதிக்கு இவர்களது ஓட்டல் மற்றும் இரவு வெகு நேரம் இயங்கும் என சொல்லப்படும் நிலையில் இட்லி, தோசை மற்றும் பிரைட் ரைஸ், சிக்கன் போன்றவை இவர்களது கிடைக்கும். நேற்று இரவு வழக்கம் போல வியாபாரம் செய்து வந்த நிலையில் ஓட்டலுக்கு 23 வயதுடைய கவியரசன், 22 வயதுடைய ஸ்ரீகாந்த் மற்றும் 19 வயதுடைய பிரசாந்த் ஆகிய மூவரும் சாப்பிட சென்றிருக்கின்றனர்.
அவர்களிடம் சென்று சாப்பிட என்ன வேண்டும் என கேட்ட போது திமிராக தற்போது பழக்கத்தில் இல்லாத அசைவ கறிகளை கேட்டு அது தான் வேண்டும் என பிரச்சனை செய்திருக்கின்றனர். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் மனித கறி இருந்தால் தான் சாப்பிடுவோம் என டார்ச்சர் செய்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ‘நாங்க கேட்கிற எதுவுமே உங்க கடையில் இல்ல அப்பறோம் எதுக்கு கடை நடத்துறீங்க” என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழழகன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்த போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. எனவே அவர்களை பேசி ஓட்டலை விட்டு வெளியே அனுப்ப முயற்சித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கவியரசன், ஸ்ரீகாந்த், பிரசாந்த் ஆகியோர் கடையின் உரிமையாளர்களான தமிழழகன் மற்றும் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை பார்த்த வாடிக்கையாளர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்த பொது குடிபோதையில் இருந்த மூவரும் மற்றவர்களையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. எனவே காவல் நிலயத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரையம் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்கள் மீது தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓட்டலில் மனித கரி கேட்டு வாலிபர்கள் அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.