கோயில் அறங்காவலர் தேர்வு... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கோயில் அறங்காவலர் தேர்வு... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...
Published on
Updated on
1 min read

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை கூறியுள்ளது.

4 மாவட்டங்களில் இம்மாத இறுதியிலும், மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மே மாதத்துக்குள் குழுவை நியமிக்காவிடில் அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆஜராக நேரிடும் என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழுக்கள் மூலம் எத்தனை நாட்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனவும் ஐகோர்ட் தெரிவித்தது. கோயில் அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கை ஏப்ரல் 5ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com