பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து...

கள்ளக்குறிச்சியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து...
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி | சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கனரா வங்கிக்கு எதிரே வசித்து வரும் திருச்செந்தூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பழைய இரும்பு, பழைய என்ஜின் ஆயில் பிளாஸ்டிக்,அட்டைப் பெட்டிகள் சில்லறையாக வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் மர்மமான முறையில் முத்துக்குமாரின் கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு  தொடங்கியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சின்னசேலம் சங்கராபுரம் தியாகதுருகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

கடையில் பழைய இன்ஜின் ஆயில் மற்றும் டயர் உள்ளிட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்கள்இருப்பதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த  தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.

அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதாலும் கடும் குளிர் நிலவுவதாலும் அந்த பகுதியில் அதிகாலையில் ஏதேனும் வேலைக்கு வருபவர்கள் குளிர்  காய்வதற்காக தீ மூட்டம் கொளுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டதா?அல்லது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் கள்ளக்குறிச்சிபோலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com