சுப்பராணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா...

மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சுப்பராணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | திண்டிவனம் அடுத்த மலை மேல் அமைந்த பிரசித்தி பெற்ற மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச விழா பால் காவடி மற்றும் தீமிதித்தல் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதில் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவடி பூஜையும், 1008 சங்குகளுக்கு முதல் கால பூஜையும் நடைபெற்றது.

பக்தர்கள் அனைவரும் அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்க கோஷமிட்டபடி  அக்னி குளக்கரையிலிருந்து பால் காவடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து மகா அபிஷேகமும்,  1008 சங்காபிஷேகமும் மாலையில் நடைபெற உள்ளது.

பின், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com