தஞ்சை : பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக புகார்...! ஆய்வு மேற்கொண்டு வரும் போலீசார்...!

தஞ்சை : பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக புகார்...! ஆய்வு மேற்கொண்டு வரும் போலீசார்...!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் சன்னதியில் உள்ள சிலை மாயமாகி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் கிடைத்தது. அந்த புகாரின் அடிப்படையில் இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். 

இது தொடர்பாக அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், கோவில் பணியாளர்கள்,சிவாச்சாரியார்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்திரன் சிலை தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் பிறகே சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com