போராடிய தீட்சிதர்களைக் கைது செய்த போலீசார்... சிதம்பரத்தில் பரபரப்பு...

போராடிய தீட்சிதர்களைக் கைது செய்த போலீசார்... சிதம்பரத்தில் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

சமீபத்தில், மாணவி ஒருவருக்கு மாணவர் தாலியை விளையாட்டாக கட்டிய வீடியோ வைரலானதை அடுத்து, பலரது கவனத்தையும் பெற்றது. இதனையடுத்து, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடரப்பட்டது.

அதில், வீடியோவில் இருப்பவர்கல் குழந்தைகளாக இருப்பதால், அவர்களைக் கைது செய்ய முடியவில்லை. அதனால், வீடியோவை வெளியிட்டவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த வீடியோவை வெளியிட்டவர், கோவில் தீட்சிதர்களின் செயலாளராக இருக்கும் ஹேமசபேச தீட்சிதர் என்பது தெரியவந்ததை அடுத்து, அவ்ரை கடலூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளராக ஹேமச பேச என்பவர் இருந்து வருகிறார்.  இந்த நிலையில், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோயில் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தை திருமணம் தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் சென்றதை கண்டித்து திடீர் மறியல் மறியலில் ஈடுபட்ட ஒரு சில தீட்சிதர்களை போலீசார் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com