பணம் தர மறுத்த கடை ஊழியர்...! ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்...!

பணம் தர மறுத்த கடை ஊழியர்...!  ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்...!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவில் முண்டாசுராமு பழக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் இந்த பழகடைக்கு வந்த இரண்டு திருநங்கைகள் அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த முதியவர், முதலாளி இல்லை என்றும், அதனால் பணம் தர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் அந்த முதியவரிடம் தகராறு செய்துள்ளனர். 

இருவருக்கும் தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் பழக்கடையில் இருந்த பழங்களை சாலைகளில் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஆனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com