ஈரோட்டில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகனும் உயிரிழப்பு!

ஈரோட்டில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகனும் உயிரிழப்பு!
Published on
Updated on
1 min read

ஈரோடு அம்மாபேட்டை அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்துள்ள ஆணைகவுண்டனூர் கல்லகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணுபையன் மனைவி அய்யம்மாள் ( 60) இவர்களுக்கு விஜயா ( 42) என்ற மகளும் மாதேஷ் (வயது 40 ) என்ற மகனும் உள்ளனர்.

அய்யம்மாவின் கணவர் கண்ணு பையன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே அய்யம்மாள் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். அவரது மகள் விஜயாவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர் கணவருடன் வசித்து வருகிறார். மகன் மாதேஷ் திருமணம் செய்து இருந்தாலும் மனைவியைப் பிரிந்து  தாயுடனே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யம்மாள் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் அவரது வீட்டில் உயிரிழந்தார்.

தாய்க்கு  இறுதி சடங்கு செய்துவிட்டு வீட்டிற்கு வந்த மகன் தாயின் நினைவிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அதிர்ச்சியில் இருந்த மகன் முந்தைய நாளில் தாயை அடக்கம் செய்த அதே நேரத்தில் மகன் மாதேஷும் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த மறுநாளே துக்கம் தாங்காமல் உயிரை விட்ட மகனால் உறவினர்களும் ஊர் மக்களும் சோகத்தில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com