விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை.......

விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை.......

Published on

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

மழையில் சேதம்:

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை கடந்த மழையின் போது சேதமடைந்தது.  இதனை சீரமைக்கும் பணியினை சென்னை துணை மேயர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் பாதையை சீரமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  

அதனை தொடர்ந்து மெரினா கடற்கரை பகுதியில் பழுதடைந்துள்ள குடிநீர் மையத்தை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

விரைவில் பயன்பாட்டிற்கு:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை கடந்த மழையில் சேதமடைந்தது எனவும் இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.  

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சற்று நீளம் குறைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் ஒரு சில நாட்களில் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.  மாற்றுத்திறனாளிகள் பாதை வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களில் சேதமடையாதவாறு திட்டமிட்டு சீரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com