வைத்தியநாத சுவாமி கோவிலில் தேர் திருவிழா - வடம்பிடித்து தேரை இழுத்து உற்சாகம்

இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ther thiruvila
ther thiruvilaAdmin
Published on
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் பிரசித்திபெற்ற வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஒடும் கொள்ளிடம் ஆறு இந்த கோவிலின் முன்பு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஒடுவதால் காசிக்கு நிகராக கருதபடுகிறது. இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த 03 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைப்பெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என்று கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com