“தீ வைத்து எரிக்கப்பட்ட தந்தை மகன்” - திருமணமான வீட்டில் கேட்ட அலறல் சத்தம்.. கன்னியாகுமரி சென்றவருக்கு காத்திருந்த ஷாக்!

பலத்த தீக்காயங்களுடன் சகாரியா ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருகிறார்.
“தீ வைத்து எரிக்கப்பட்ட தந்தை மகன்” - திருமணமான வீட்டில் கேட்ட அலறல் சத்தம்.. கன்னியாகுமரி சென்றவருக்கு காத்திருந்த ஷாக்!
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் அருகே ஆரைக்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த கொடூரமான சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த தந்தை மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார்.பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ஆரைக்குளம், சர்ச் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் . உடனடியாக, உதவி மாவட்ட அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு, 66 வயதுடைய சகாரியா என்பவர் தீக்காயங்களுடன் வீட்டின் வெளியே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரது மனைவியான 57 வயதுடைய மெர்சி மற்றும் அவரது மகன் 27 வயதுடைய ஹார்லி பினோ ஆகியோர் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கியிருந்தனர். தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, தீயை அணைத்து உள்ளே இருந்த இருவரையும் மீட்டனர்.

படுகாயமடைந்த மூன்று பேரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (TVMCH) கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மெர்சியும், ஹார்லி பினோவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் சகாரியா ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சகாரியா - மெர்சி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இன்று அவர் கன்னியாகுமரிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் சகாரியாவுக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் ஹார்லி பினோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின் போது, சகாரியா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, பின்னர் மேர்சியும் -தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த வழக்கை குறித்து முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com