
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுவாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் திருத்தணி நகராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் இன்று காலை பள்ளிக்கு செல்வதாக அவர்கள் பெற்றோர்களிடத்தில் தெரிவித்துவிட்டு தனியார் பேருந்தில் வந்த மாணவியின் வாயிலிருந்து நுரை தள்ளி மயக்க நிலையில் பேருந்தில் கீழே சரிந்துள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் இவருக்கு வலிப்பு வந்து விட்டதா என்ன ஆனது என்று கேட்பதற்குள் அவரது கைகளில் பிளேடால் அறுத்துக் கொண்ட காயம் இருந்ததை பார்த்துள்ளனர்.
எனவே உடனடியாக திருத்தணி அரசு மாவட்ட மருத்துவமனையில் அந்த 12ஆம் வகுப்பு மாணவியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மாணவி மண்ணெண்ணெய் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் கைகளில் பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். மாணவி தனது கைகளில் ஆங்கிலத்தில் பேனாவில் [my life full damage] என்ற வாசகத்தை எழுதியுள்ளார். இதனை பார்த்து உடனடியாக மருத்துவர்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவியை திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? எதற்காக மண்ணெண்ணெய் குடித்தார்? ‘என் வாழ்க்கை முழுவதுமாக முடிந்து விட்டது’ என்று ஏன் எழுதினார் கைகளில் ஏன் அறுத்துக் கொண்டார் போன்ற சம்பவங்கள் குறித்து பள்ளியில் அந்த மாணவியுடன் பயிலும் சக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் பெண் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் இந்த மாணவிகள் பேருந்து ஏறிச் செல்லும் திருத்தணி நகராட்சியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது என்று மாணவிகளின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.