"இந்த காலத்துல இப்படியும் நண்பர்களா" - நண்பனின் பிறந்தநாளில் நடந்த சோகம்.. இப்படி friends கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்

பேனரின் மேல்பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் இருவரும் மின்மாற்றி
lokesh and dhanush
lokesh and dhanush
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், ராஜா இவருக்கு 16 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கிறார், திருநகரம் பகுதியை சேர்த்தவர் ராமலிங்கம் இவரது மகன் தனுஷ் வயது 18.லோகேஷ்,தனுஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் இன்று கண்ணனுக்கு பிறந்த நாள் என்பதால், நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் திருவண்ணாமலை மணலூர்பேட்டை, சாலையில் வாழ்த்து பேனரை லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் உள்ளிட்ட நண்பர்கள் கட்டியுள்ளனர். அப்போது பேனரின் மேல்பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் இருவரும் மின்மாற்றி மீது ஏறி உள்ளனர்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது சம்பவம் இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் நிலைய போலீசார், இறந்த லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் ஆகிய இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பணின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும் போது மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்தது இரண்டு வாலிபர்கள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com