73 ஆண்டு விவசாய நிலங்களுக்கு நிரந்தர பட்டா வேண்டி மனு...

ஏலகிரி மலை பகுதியில் உள்ள நிலத்தை போலி பட்டா மூலம் பதிவு செய்வதை தடுக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.
73 ஆண்டு விவசாய நிலங்களுக்கு நிரந்தர பட்டா வேண்டி மனு...
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை அர்த்தனாவூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளக் கனியூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பங்களா ராமன். இவரது வாரிசுகளான ராஜம்மாள், கமலா, துரைசாமி, வெங்கடேசன், குமார் ஆகியோர் அனுபவத்தில் உள்ள ஏலகிரி மலை அத்தனாவூர் சர்வே எண் 346, பட்டா எண் 219 கொண்ட - 3.23 ஏக்கர் நிலத்தில் விவசாயம் கடந்த 73 ஆண்டுகளாக  செய்து வருகின்றனர். 

இந்த நிலமானது 1950 ஆம் வருடம் வெஸ்ஸிபிரவுன் அவர்கள் பங்களா ராமனிடம் வாய்மொழி உத்தரவாக நிலத்தை ஒப்படைத்து விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு கடந்த 73 ஆண்டுகளாக இதுவரை அவர்களுடைய வாரிசுதாரர்கள் இந்த நிலத்தை உரிமை கோரி வரவில்லை.

ஆனால் அந்த நிலத்திற்கு போலியாக பட்டா தயாரித்து பதிவு செய்ய கோடியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர் சிவகுமார் முயற்சித்து வருவதாக தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுபவத்தில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் விவசாயம் செய்யும் மேற்படி நபர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் பயமுறுத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அவர்களிடமும் மனு அளித்தனர்.  

சர்வே எண் 346, பட்டா எண் 219 கொண்ட இந்த விவசாய நிலத்தை, வேறு யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என்றும், தங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com